search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி"

    • அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
    • ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

    2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்

    நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"

    இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
    • உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.

    • சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது.
    • தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது. மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் இதை உச்சநீதிமன்றம் பயன்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் நடத்திய அதிகாரி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவித்த நிலையில் அதை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு தேவையான இடங்களுக்கு பாதிக்குக் கீழ்தான் இருந்துள்ளது ஆனாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு பதிவான 8 வாக்குச் சீட்டுகளை எடுத்து வேண்டுமென்றே தேர்தல் நடத்தி அதிகாரி சுயநினைவுடன் சிதைத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப்படையாக ஒரு தவற்றைச் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறிவிட்டு மிக தைரியமாக இருக்கிறார் என்றால் இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை? எனவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக தேர்தல் அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்க வேண்டுமென உத்தரவு.

    • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி நேற்று(பிப் 19) உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்றே (பிப் 18) சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "சண்டிகரில் நடைபெறும் குதிரைப்பேரம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் ,மீண்டும் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் 74 நாட்கள் மட்டுமே இருப்பார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தை சேர்ந்த என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி பொறுப்பேற்றார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது.

    என்.வி.ரமணா ஓய்வையொட்டி சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றார். அவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் 74 நாட்கள் மட்டுமே இருப்பார்.

    சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியான யு.யு.லலித் 1957-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி மராட்டிய மாநிலம் சோலாபூரில் பிறந்தார். இவரது தந்தை யு.ஆர். லலித் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலாகவும் இருந்தார்.

    யு.யு.லலித் மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் வக்கீலாக பதிவு செய்தார். குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர் 1983 முதல் 1985 வரை மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

    அதை தொடர்ந்து 1986 முதல் 1992 வரை அப்போதைய அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜியன் வக்கீல்கள் குழுவில் பணியாற்றினார். பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். அவர் 2 முறை சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

    2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி சட்ட புலமை காரணமாக அவர் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட் டார். இதன் மூலம் கீழ் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றாமல் சுப்ரீம் கோர்ட்டின் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நீதிபதி என்ற பெருமையை யு.யு.லலித் பெற்றார். இன்று அவர் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

    • 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார்.
    • 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

    உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றதையடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.

    நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார். மேலும் இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார். #CJI
    புதுடெல்லி :

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்யுள்ளன.

    தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு குடியரசு தலைவரிடம் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பரிந்துரை செய்துள்ளார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #CJI
    ×